left தமிழ் மாலை: ஏன் தமிழ் மாலை?

Nov 11, 2007

ஏன் தமிழ் மாலை?


ஏன் தமிழ் மாலை?
தமிழ் மாலை - பூக்கள் சேந்தாதான் மாலை ஆகும். தமிழ் வலைப்பதிவு இல்லையா? அதான், தமிழ் மாலை. அதுவும் இல்லாம தமிழ் மாலை மக்கள் மனசில பதிஞ்ச பேரு (சன் டிவியின் சீர்கேடு ஒழிக) அதான், அதே பேர்ல எதாவது நல்ல விஷயம் ட்ரை பண்ணலாம்னு இப்படி ஒரு வலை பதிப்பு.

ஏன்? நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு
தமிழ் வலைப்பூக்களை ரொம்ப நாளா (என் மாத, வருடங்களாய்) படிச்சு, ரசிச்சுட்டு வந்திருக்கேன். நாமளும் சும்மா ஒரு வலைப்பதிவு தொடங்கி ஒரு சோதனை முயற்சி (சோதனை எனக்கில்ல, தமிழுக்கும் உங்களக்கும்தான்) பண்ணலாம்னு ஒரு கடலளவு கனவு. இன்னும் ரெண்டு வருஷத்தில அந்த சாதிக்கிற விருதுன்னு எதோ பேசிக்கிறாங்களே, அத எப்படியாவுது வாங்கிடனும் ஒரு ஆசையோட பூஜை போட்டாச்சு.

ஆமா, நீ யாரு?
நான், சந்தியா, ..டிங் டிங்.. பெயர் ஒன்றே போதும், தரம் என்றும் நிரந்தரம்..டிங் டிங்..னு ரேடியோ விளம்பரம் கேக்குதா. இப்போதைக்கு என்னை பத்தி சொல்ல எதுவும் இல்ல. என்னோட எழுத்துகளுக்கு (ஆமா, பாடலாசிரியை தாமரைன்னு நினைப்பு) வழி விட்டுட்டு இப்படி ஒரு ஓரமா ரெஸ்ட் எடுத்துக்கிறேன். சொந்த கதை எல்லாம் கண்டிப்பா பின்னாடி வரும், ஜாக்கிரதை.

எதைப் பத்தி எழுதலாம்?
நீங்க எதைப் எழுதுனா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க. இன்னும் ஒரு ஐடியாவும் இல்லா - சரி, எதையாவது பொத்தாம் பொதுவா உளற ஆரம்பிக்கறேன் (ஆல்ரெடி தேர்ட் பாரா) ஆயிடுச்சு.

நீங்க என்ன செய்யணும்?
நிறைய படிங்க, நல்ல விஷயங்கள் கேளுங்க, பாருங்க. அன்பான வார்த்தைகளை பேசுங்க, எழுதுங்க. அடிக்கடி இங்க வாங்க, பிடிச்சிருந்தா நல்ல கமெண்ட் எழுதுங்க, பிடிக்கலைன்னா அட்வைஸ் சொல்லுங்க. கேட்டு என்னை திருத்திக்கறேன்.

வாங்க பழகலாம்.

0 Comments: