எனக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்கும், அதுலயும் எனக்கு இன்னும் ஒரு கெட்டப் பழக்கம் இருக்குங்க. சினிமா பாக்கறத கெட்ட பழக்கம்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்! OK, அது என்னன்னு கேட்டீங்கன்னா, எனக்கு முதல் பிரேமிலிருந்து பாக்கணும்.
நன்றி கார்டுலேருந்து, அப்பதான் படம் பாத்த மாதிரி இருக்கும். நன்றி கார்டு பாத்தா எந்தெந்த ஊர்ல படம் எடுத்திருக்காங்க, எந்த Bank-கிட்ட கடன் வாங்கி இருக்காங்கன்னு முதற்கொண்டு தெரியும். இதையெல்லாம் தாண்டி யார் யாரெல்லாம் இந்த படத்துக்காக Work-செஞ்சிருக்காங்கன்னும் தெரிஞ்சுக்கலாம்.
Films Development கார்ப்பரேஷன் (NFDC) தயாரித்த நியுஸ் ரீலில் இருந்து பாக்க முன்னாடியே போய் உட்கார்ந்து விடுவோம். இப்போதும் எவ்ளோ பெரிய English படம் பாத்தாலும், முதல் சீன் (அவர்களின் டைட்டில் அனிமேஷன் அழகே அழகுதான்) போய் விட்டால் பார்க்க மாட்டேன்.
சின்ன வயசில நானும் எங்க அண்ணனும் 'சண்டை பயிற்சி' கார்டு வருதான்னு பாத்துக்கிட்டு இருப்போம், வந்தா ஒரே குஷிதான். குடுத்த காசுக்கு கமலோ, ரஜினியோ சண்டை போடுவாங்கன்னு ஒரு குதூகலம்.
சரி, சரி விஷயத்துக்கு வரேன். நான் என்னோட வலைப்பதிவு ஆரம்பிக்க யார், யார் காரணம் அப்படின்னும் சொல்லணும் இல்லையா. அதுக்குத்தான் இவ்ளோ ஜல்லி. முதல் முதலா, நான் இணையத்தில தமிழ் பார்த்து திண்ணையில் தான். திண்ணையில் சித்ரா ரமேஷ் 'ஆட்டோ கிராப்: செந்தமிழ் தேன்மொழியாள்' அப்படின்னு அவங்களோட நினைவு தொகுப்பு கலந்து எழுதின தொடர் எப்படா அடுத்த வாரம் வரும் என்று காத்திருந்து என்னை படிக்க வச்சுது.
அப்புறம் யாரோ கை காட்டி 'மரத்தடி'க்கு போய் சேர்ந்தேன். அங்க மீனாக்ஸ்-னு ரொம்ப நல்லா கதை, கவிதைன்னு ரொம்ப ஜாலியா எழுதிகிட்டு இருந்தாரு, அவரோட 'சென்னை நகரத்து தேவதைகள்' (சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மாதிரி) படிங்க, சுவாரஸ்யமா இருக்கும். அப்புறம் அவருடைய 'எழுத்தென்னும் தவம்' வலைப்பதிவின் நிரந்தர விசிறியானேன் (தலைவா, மறுபடி எழுதுங்க). மீனாக்ஸின் வலைப்பதிவுகளில் இன்னும் எனக்கு பிடித்த இரண்டு - சினிமா விமர்சனங்கள் வர்ற 'திரை விமர்சனம்', மற்றும் எளிய தமிழில் மார்க்கெட்டிங் பற்றி அவர் நடத்தி வந்த 'தமிழில் மார்க்கெட்டிங்' பாடங்கள் (தமிழில் சிறந்த வலைப்பதிவுகளில் ஒன்று இது).
அப்புறம் தமிழ்மணம் பழக்கமாகி, நிறைய பதிவுகள் பாத்தாச்சு. குறிப்பிடும் படியா, எனக்குப் பிடிச்ச வலைப்பதிவர்கள் இவர்கள்.
- சுவடு ஷங்கர் (எல்லா பதிவுகளும்) ,
- முகமூடி (குறிப்பா ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி?),
- பாஸ்டன் பாலா (எல்லா எழுத்துக்களும்),
- டுபுக்கு (ஜொள்ளித் திரிந்த காலம்),
- துளசி கோபால் (ரொம்ப நல்லா எழுதறீங்க, மேடம்),
- தேசிகன் (சுஜாதாவின் சீடர். அச்சு அசலா சுஜாதா மாதிரியே எழுதறாரு),
- கிறுக்கல் குரு (இவரும் சுஜாதாவின் தீவிர ரசிகர். எழுத்திலும் பாதிப்பு),
- ரஜினி ராம்கி ( இவருக்கும் ரஜினியை பிடிக்கும், என்னை போலவே),
- மேல் kind (கதை, திரைக்கதை, வசனம் -இறைவன்),
- கிருபா ஷங்கர் (மேல இருக்க பதிவு),
- இட்லி வடை (சூடான சினிமா, அரசியல் - ஒரு தினத்தந்தி),
- பெனாத்தல் சுரேஷ் (நையாண்டி தொடர்கள்),
- கடைசியா நம்ம 'கைப்புள்ள' (காமெடியா எழுதனாலும் நல்லா இருக்கு, சீரியஸா எழுதனாலும் நல்லா இருக்கு)
"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு,
இப்ப ரொம்பக் கேட்டு போச்சுண்ணே
அத சொன்ன வெட்க கேடு,
அத சொல்லாட்டி மானக் கேடு" பாட்டுல சொல்ற மாதிரி, ரொம்பவே நல்லா இருந்த தமிழ்ப் பதிவுலகம் இப்போ சொல்லிக்கிற மாதிரி இல்ல.
பெரிய தலைகள் எல்லாம் நமக்கு எதுக்கு வம்புன்னு ஒரு ஓரமா கரை ஒதுங்கிட்டாங்க. அவங்கள எல்லாம் படிச்ச பிறகுதான் எனக்கும் வலைப்பதிவு ஆசை வந்துச்சு. So, இதோ நானும் உளற ஆரம்பிச்சாச்சு. பிழைகள் இருந்தா மறந்து, சிரிச்சிட்டு போய்டுங்க.